PLANS


திட்டம்:

அ)  மாணவர் பயிற்சிப்பட்டறை.
ஆ) கல்வி விழிப்புணர்ர்வு முகாம்
இ) மக்கள் கணினி
ஈ) பயிலரங்கம்


செயல்விளக்கம்:
         
மாணவர் பயிற்சிப்பட்டறை : 
             தமிழகத்தில் கல்வி விகிதம் பின் தங்கிய மாவட்டங்களிலிருந்து இரு கிராமங்களைத் தேர்வு செய்து, அங்குள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள முதல் தலைமுறை மற்றும் ஆதரவற்ற மாணவர்களை ‘திறன் மதிப்பீடு’  மூலம் தேர்வு செய்து, அவர்கள் கிராமத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் நடத்தப் படுகிறது.

திறன் மதிப்பிட்டின் வாயிலாக அவர்களை மூன்று குழுக்களாகப் பிரித்து, நிபுனர்களின் உதவியுடன் அவர்கள் திறனை மேம்படுத்துவோம்.


கல்வி விழிப்புணர்வு முகாம்:
               மிகவும் பின் தங்கிய மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்குச் சென்று, கல்வி பற்றிய விழிப்புணர்வை அவர்கள் பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர்களின் உதவியுடன் கல்வி சார்ந்த குறும்படங்கள், நாடகங்கள் மற்றும் கண்காட்சியின் வாயிலாக வலியுறுத்துவோம்.



மக்கள் கணினி:
·                     சிற்றூர் தோறும் கணினிக்கல்வியை தமிழ் மொழியில் வழங்குதல் கணினி வழி தமிழ் மொழியை வழுங்குதல்.
·                     சிற்றூர் வாழ் ஏழை எளியவர்களுக்கு கணினியின் மாயையை தகர்த்தெறியவும்,கணினியும் கைப்பேசிப்போன்றுதான் என்கிற மனநிலை உருவாக்கும் திட்டம்.
·                     தமிழில் தகவல் தொழிலநுட்ப சேவையை சிற்றூர் மக்களுக்கு அளிக்கவும் வழிசெய்யும் திட்டம்.


      
பயிலரங்கம்:
           கிராமப்பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் அடுத்தகட்ட கல்வித் தேவைகளுக்கு வழிகாட்டுதலும் மேற்படிப்பிற்கான கல்வி ஆலோசனை வழங்குதலும் நடைபெறும்.


நல்வழிகாட்டிகள்:
   அ) உறுப்பினர்கள்
   ஆ) தன்னார்வத் தொண்டர்கள்
   இ) உதவியாளர்கள்
   ஈ) ஆலோசகர்கள்








To Register Please Click Here...